உளவு எச்சரிக்கை துல்லியமானது...! -தல்கேட் பகுதியில் பயங்கரவாதிகள் கைது...! - Seithipunal
Seithipunal


ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மீண்டும் பதற்றமடைந்தது. பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் விமான தளங்களும் கடுமையாக சேதமடைந்தன.

இதற்குப் பழி வாங்கும் நோக்கில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் புதிய தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.அதன்கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் மற்றும் ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவுத்துறை) அதிகாரிகள் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கூட்டத்தில், “இந்திய பாதுகாப்புப் படைகளையும் அரசியல்வாதிகளையும் குறிவைத்து விரைவில் தாக்குதல் நடத்த வேண்டும்” என்ற உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்களது ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கி உள்ளனர். மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனைகள் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக குளிர்காலங்களில் எல்லை ஊடுருவல் குறைந்தாலும், இம்முறை தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கில் அதையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த சூழ்நிலையில், காஷ்மீர் தல்கேட் பகுதியில் பெரும் பயங்கரவாத தாக்குதலை போலீசார் துல்லியமான நடவடிக்கையால் முறியடித்தனர்.சோதனைச் சாவடியில் வழக்கமான வாகனச் சோதனையின் போது, ஆயுதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள்:
ஷா முதாயிப் (கூலிபோரா கன்யார்)
கம்ரான் ஹசன் ஷா (அதே பகுதி)
முகமது நதீம் (மீரட், உத்தரப் பிரதேசம்)
அவர்களிடமிருந்து ராணுவம் மற்றும் போலீசார் தீவிரவாத நடவடிக்கைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றியுள்ளனர்.இவர்கள் எல்லை ஊடுருவல் குழுவுடன் தொடர்புடையவர்கள். நாட்டில் பெரிய தாக்குதலைத் திட்டமிட்டிருந்தனர்,” என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

intelligence warning accurate Terrorists arrested Talgate area


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->