சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு! ‘உள்நுழைவு இல்லையெனில் வன்கொடுமை இல்லை’ ...! - சட்ட வட்டாரங்களில் அதிர்ச்சி
Controversial verdict by Chhattisgarh High Court No violence if there no entry Shock legal circles
இந்தியாவில் சில நேரங்களில் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் கடும் விவாதங்களை கிளப்புவது வழக்கமாக உள்ளது. அவ்வாறான சூழலில், பின்னர் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்து நிறுத்திவைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வரிசையில் தற்போது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் உடலுறுப்பு உள்ளே ஆண் உறுப்பு நுழைவு நடைபெறாமல், வெறும் விந்து வெளியேறுவது மட்டும் நடந்தால் அது ‘பாலியல் வன்கொடுமை’ அல்ல; ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ என மட்டுமே கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்திரை சேதமடையவில்லை என்றும், வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், உடலுறவு உள்நுழைவு நடந்ததற்கான தெளிவான ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறைத்தண்டனை, ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ குற்றமாக மாற்றப்பட்டு 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் விளக்கப்படி, மிகச் சிறிய அளவிலான உள்நுழைவு கூட நடந்திருந்தால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும்; ஆனால் உள்நுழைவு இல்லாத நிலையில் அந்த குற்றப்பிரிவைச் சாட்ட முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் விளக்கம் அளித்தார்.
English Summary
Controversial verdict by Chhattisgarh High Court No violence if there no entry Shock legal circles