டி20 உலகக் கோப்பை: இலங்கையை சொந்த மண்ணில் சாய்த்த ஜிம்பாம்பே..! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடரின் 38 வது போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அண, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அணியின் சார்பில், பதும் நிசாங்க அபாரமாக ஆடி, அரைசதம் கடந்து, 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

பவன் ரத்நாயக்க 44 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அணியின் சார்பில் கேப்டன் சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.  அதிகபட்சமாக பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ரன்கள் என் அபாரமாக ஆடி, ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில், ஹேமந்த 02 விக்கெட்டினையும், தசுன் சானக , வெள்ளாலகே தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zimbabwe beats Sri Lanka in T20 World Cup


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->