தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல்-க்கு ஆயுள் தண்டனை; காரணம் என்ன..?
Former South Korean President Yoon Suk yeol sentenced to life imprisonment
கடந்த 2024-ஆம் ஆண்டு தென் கொரியாவில் அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். அதாவது, ஆட்சியை கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.
இதற்கு பொதுமக்கள் மத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவ சட்டத்தை கொண்டுவந்த சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தால் யூன் சுக் யோல் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மீதான வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதில், ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்துள்ளது. யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைத் திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிபதி ஜீ குய்-யோன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
முன்னதாக அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 05 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Former South Korean President Yoon Suk yeol sentenced to life imprisonment