வாஷிங்டன் டி.சியின் மேயர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்நாடு தேனியை சேர்ந்த பெண் வேட்பாளர்.!
A female candidate from Theni is running for mayor of Washington DC
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. யில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதான ரினி சம்பத் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி சம்பத், தனது 07 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இவர், மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
அதில் வெற்றி பெற்றால் தான், ஜனநாயக கட்சி சார்பில் மேயர் தேர்தல் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு, டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.
வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சி வலிமையவுள்ளது. இந்த நிலையில், உட்கட்சி தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ரினி சம்பத், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 15,000 டாலர்களுக்கும் மேலாக நிதி திரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A female candidate from Theni is running for mayor of Washington DC