உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரர் எலான் மஸ்க்...?!
Tesla Elon Musk world richest person
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ. 88 லட்சம் கோடி) அளவிலான ஊதியத்தை கோரியுள்ளார். இந்த கோரிக்கை நிறைவேறினால், மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்காரராக வரலாறு படைப்பார்.
மஸ்க்கின் பரிந்துரை டெஸ்லா பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், அதற்கு பெரும்பான்மையான ஒப்புதல் கிடைத்துள்ளது. எனினும், மஸ்க்கிற்கு இந்த தொகை பணமாக வழங்கப்படாது; அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக வழங்கப்படும் என நிறுவனத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வழங்கல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், மஸ்க் உலகின் முதல்முறையாக ட்ரில்லியன் டாலர் அளவான நிகரச் சொத்து கொண்ட நபராக உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, மஸ்க்கின் அரசியல் கருத்துகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனைக்கு சற்றளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இருப்பினும், டெஸ்லா பங்கு மதிப்பு இன்னும் உயர்வாகவே திகழ்கிறது.
English Summary
Tesla Elon Musk world richest person