ஏழுமலையான் முன்னிலையில் இலவச திருமணம்: திருப்பதி தேவஸ்தானத்தின் உன்னதத் திட்டம்!
Divine Union at Tirumala TTDs Free Marriage Scheme
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல், ஏழை எளிய மக்களுக்காகத் திருமலையில் உள்ள ‘கல்யாண வேதிகா’ என்னும் இடத்தில் இலவச திருமணங்கள் மிகச்சிறப்பாக நடத்தி வைக்கப்படுகின்றன.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இலவச சேவைகள்: புரோகிதர், மங்கல வாத்தியங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் கங்கணங்கள் தேவஸ்தானம் சார்பிலேயே இலவசமாக வழங்கப்படுகின்றன. (திருமண வீட்டார் மாலை மற்றும் ஆடைகளை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது).
சுவாமி தரிசனம்: திருமணம் முடிந்தவுடன் புதுமணத் தம்பதி மற்றும் அவர்களது பெற்றோர் என மொத்தம் 6 பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் வழியாக இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிரசாதம் & பதிவு: அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படுவதோடு, திருமணமானது சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்படுகிறது.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்துக்களாக இருத்தல் அவசியம்.
மணமகளுக்கு 18, மணமகனுக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
இருவருக்கும் இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும்.
2016-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கடந்த 2025 டிசம்பர் இறுதி வரை மொத்தம் 26,777 திருமணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி நடத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏழுமலையான் பாதத்தில் தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் பக்தர்கள், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
English Summary
Divine Union at Tirumala TTDs Free Marriage Scheme