பாகிஸ்தானை விட ஆபத்தான இடமாக வகைப்பாடு: இந்தியத் தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் தாயகம் திரும்ப உத்தரவு!
India Recalls Diplomat Families from Bangladesh Amid Rising Security Threats
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான தொடர் வன்முறை காரணமாக, அங்குள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரை உடனடியாக இந்தியாவுக்குத் திரும்புமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அதிரடி முடிவிற்கான காரணங்கள்:
தூதரகம் மீது தாக்குதல்: வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஹாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளி இந்தியாவில் இருப்பதாகக் கிளம்பிய வதந்தியால் சட்டோகிராமில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை: முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு, ஹிந்து மதத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன.
தேர்தல் பதற்றம்: அடுத்த மாதம் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை விட ஆபத்தான இடமாக வகைப்பாடு:
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, வங்கதேசத் தூதரகப் பணியை இந்திய வெளியுறவுத் துறை "நான் ஃபேமிலி போஸ்ட்" (Non-Family Post) என வகைப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்- Non-Children Post மனைவியை மட்டும் அழைத்துச் செல்லலாம்; குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
வங்கதேசம்- Non-Family Post குடும்பத்தினர் யாருக்கும் அனுமதியில்லை; அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை விட வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக இந்தியா கருதுவது உறுதியாகியுள்ளது. இரு நாடுகளும் தங்களது தூதரகங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ள போதிலும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
English Summary
India Recalls Diplomat Families from Bangladesh Amid Rising Security Threats