சென்னை: அம்மா உணவகங்களில் இலவச உணவு! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது ,

குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.

மிக அத்தியாவசிய தேவைகள்  ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்படும் என்றும், உணவுகள் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகஎழும்பூர், ஆர்பிஐ, பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர், ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளைவ் ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fenjal Chennai Rain Amma Unavagam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->