ஏ.ஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம் இயற்கையை எய்தினார்..! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகவும், உலகமே தேடும் இசையமைப்பாளராகவும், தமிழகத்தில் பிறந்து இந்தியளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழ் திரையுலகம் முதல் ஹாலிவுட் வரை இவர் கால்தடத்தை பதிவு செய்துள்ளார். 

பல்வேறு ஆஸ்கார் விருதுகளையும் வாங்கிக்குவித்த பெருமையைக்கொண்ட தமிழராக ஏ.ஆர். ரகுமான் இருந்து வந்தார். ஏ.ஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம். ரகுமானின் தந்தை ஆர்.கே சேகர், ரகுமானிற்கு 9 வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். 

இதனையடுத்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த ஏ.ஆர். ரகுமான், பல சாதனைகளுக்கு தனது தாயாரின் பெரும் உதவியே காரணம் என்றும் பல்வேறு இடங்களில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த சில வருடமாகவே உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கரீமா பேகம் இயற்கையை எய்தினார். தாயின் மறைவு மகன் ஏ.ஆர் ரகுமானை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous Music Director AR Rahman Mother Kareema Begam Passed Away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal