#BigBreaking | தமிழகத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் 1000 ரூபாய்?! போக்குவரத்து ஆணையர் மறுப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000/- நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்தி பரவி வருகிறது.

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம். சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000/- வழங்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000/- நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழக அரசு தரப்பிலிருந்து, அல்லது அந்த துறை சார்ந்த ஆணையரிடமிருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வராத நிலையில் இப்படியான வதந்தியை விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், வைரலாக இந்த செய்தி உண்மை இல்லை என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake News split in social media 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->