"அரங்கம் அதிரட்டுமே.. விசில் பறக்கட்டுமே.. கரங்கள் ஒசரட்டும்மே..'' கூலி படத்தின் முன்னோட்ட டீசர் வெளியீடு..!
The preview teaser of the film Coolie is released
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171-வது படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் 'கூலி' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, கூலி படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த டீசரை விளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
The preview teaser of the film Coolie is released