நான்கு தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் – ஒரே ஆண்டில் 34 திரைப்படங்கள் வெளியான அபூர்வ சாதனை
Mohanlal wins four National Awards rare feat of releasing 34 films in a single year
திருவனந்தபுரம்: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு பிரபல நடிகர்கள் இருந்தாலும், நடிப்புத் திறமை மற்றும் வெற்றிச் சாதனைகளில் தனி முத்திரை பதித்தவர் மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர் மோகன்லால். இவர் நாட்டின் மிக உயரிய சினிமா அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை வென்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், ‘பாரதம்’, ‘வானப்பிரஸ்தம்’ உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அதற்குட்பட்ட ‘புலிமுருகன்’, ‘முந்திரிவல்லிக்கல் தலிர்க்கும்பல்’, ‘ஜனதா கேரேஜ்’ போன்ற திரைப்படங்களுக்கு சிறப்பு ஜூரி விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரது நடிப்புத் திறமைக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
சினிமா வரலாற்றில் மிக அபூர்வமான சாதனையாக, 1986ஆம் ஆண்டில் மோகன்லால் நடித்த 34 படங்கள் வெளியானது. இதில் 25 படங்கள் வெற்றி பெற்றது. ஒரு நடிகருக்கு ஒரே ஆண்டில் இத்தனை வெற்றி படங்கள் வெளியாகும் சம்பவம், இந்திய திரையுலகில் அபூர்வமே.
மலையாளத்தில் வெற்றிபெற்ற இவரது 14 படங்கள் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவானவை. 'ஹங்காமா', 'கரம் மசாலா', 'க்யோங்கி', 'கட்டா மீத்தா', 'த்ரிஷ்யம்', 'த்ரிஷ்யம் 2' ஆகிய வெற்றிப் படங்கள் இந்த பட்டியலில் அடங்கும்.
சினிமா துறையில் மட்டுமல்லாமல், 2009ஆம் ஆண்டில் மோகன்லால் இந்திய இராணுவத்தால் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியுடன் கவுரவிக்கப்பட்டுள்ளார். இது ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயரிய மரியாதைகளில் ஒன்று.
சமீபத்தில் நடைபெற்ற WAVES உச்சி மாநாட்டில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மேடையில் மோகன்லால் இருந்ததால் பேச மறுத்தார். அவரிடம் இருந்த மரியாதையால் தான் பேசவில்லை எனக் கூறி, மோகன்லாலின் பெருமையை வலியுறுத்தினார்.
மோகன்லால் தனது சிறப்பான நடிப்பாலும், பணிவான தன்மையாலும், பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாவின் அபிநயச் சக்கரவர்த்தி எனக் கூறலாம்.
English Summary
Mohanlal wins four National Awards rare feat of releasing 34 films in a single year