மகள்களின் காதணி விழாவுக்காக சேகரித்த 1 லட்சம் பணத்தை கரையான் அரித்த சோகம்: உதவிய ராகவா லாரன்ஸ்..!
Raghava Lawrence helped the woman who was eaten by termites with the 1 lakh rupees collected for her daughters earring ceremony
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிளாதிரி கக்கனாம்பட்டி குமார் மனைவி முத்துக்கருப்பி 30. இவருக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். தினக்கூலியாக வேலை பார்த்து வரும் இவர், கூரை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கூலி தொழிலாளியான இவர்கள் தனது மகள்களின் காதணி விழா செலவிற்காக தினமும் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேகரித்துள்ளனர். குறித்த தொகையை தகர உண்டியலில் போட்டு மண்ணிற்குள் போட்டு மனைவிபுதைத்து வைத்துள்ளார்.
அத்துடன், கடந்த 02 மாதங்களுக்கு முன் பணத்தை எடுத்து எண்ணியுள்ளார். அப்போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக தகர பெட்டிக்குள் கரையான்கள் புகுந்து, தகர பெட்டியில் இருந்த ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டு கிடந்தன.

குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக ஒரு ஆண்டிற்கு மேலாக உண்டியலில் சேமித்த ரூ.1 லட்சத்தை கரையான் அரித்ததால், தாய் தந்தை இருவரும் புலம்பி தவித்தனர். இது குறித்து அறிந்த சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்தார்.
அத்துடன், முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்க கூறியதோடு, வங்கியினரும், பணத்தை பெற்றுத் தர உதவி செய்வதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக்கருப்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். நிதியுதவி செய்த ராகவா லாரன்சுக்கு, முத்துக்கருப்பி நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
Raghava Lawrence helped the woman who was eaten by termites with the 1 lakh rupees collected for her daughters earring ceremony