நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?மதுபான விடுதியில் மோதல்!- நடந்தது என்ன?
Actress Lakshmi Menon absconding Clashes at a liquor bar What happened
கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருதரப்பினரும் நள்ளிரவில் பாரிலிருந்து வெளியேறினர்.
அந்த நேரத்தில், நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், எதிர் தரப்பைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீமினை தங்களது காரில் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அலியார் ஷா சலீம் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்தார். தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியபோது நடிகை லட்சுமி மேனனும் மூன்று நண்பர்களுடன் இருந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினர். விசாரணையின் போது, லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன் மற்றும் அனீஷ் ஆகிய இருவரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையிலும், கடத்தல் சம்பவம் நடந்தபோது லட்சுமி மேனனும் காரில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் லட்சுமி மேனனை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் எர்ணாகுளம் போலீசார் தற்போது நடிகை லட்சுமி மேனனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கேரளத்திலும் தமிழ்த் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு வினயன் இயக்கிய மலையாளப்படமான ரகுவிண்டெ சுவந்தம் ரசியா படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
English Summary
Actress Lakshmi Menon absconding Clashes at a liquor bar What happened