அணில் ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்... ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது...விஜயை கலாய்த்த சீமான்! - Seithipunal
Seithipunal


மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரையில் நிருபர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விடயங்களை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சி மாநாட்டை குறித்து, “ஒரு கட்சியின் மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அப்போது பாருங்கள். எத்தனை லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்பதை அந்த நாள் நிரூபிக்கும். மாநாட்டு உரை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் காட்டித் தருவோம்,” என்று வலியுறுத்தினார்.

விஜய் மக்கள் இயக்கம் மற்றும் பிற கட்சிகளை குறிவைத்து சீமான், “ஒரு மாநாட்டில் கூட்டம் திரண்டால் அதுவே வெற்றியை உறுதி செய்யாது. நான் விதைத்திருப்பது விதை நெல்; அது வளமான பயிராக வளரும். விஜயகாந்த் பற்றி பேசுவதால் வாக்குகள் கிடைக்காது. மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். எந்த புயல், சுனாமி வந்தாலும் என் தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்,” எனக் கூறினார்.

மேலும், வாக்கு இயந்திரங்கள் குறித்து சந்தேகம் வெளியிட்ட அவர், “இந்த மின்வாக்கு இயந்திரத்தை ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் ஜப்பானிலேயே இன்னும் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. அப்படியிருக்க, இந்தியாவில் 42 நாள் வரை இயந்திரங்களை சேமித்து வைத்து போலீஸ் பாதுகாப்பு அளிப்பது எதற்காக? அவர்களிடம் சம்பளம் வாங்கும் போலீசே பாதுகாப்பாக நிற்கும் நிலையில், மாற்றமோ, முறைகேடோ நடக்காது என்று யார் உறுதி தர முடியும்? எனவே வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்,” என வலியுறுத்தினார்.

பிரதமர் மற்றும் முதல்வர் வெளிநாட்டு முதலீடு தொடர்பான முயற்சிகளையும் சீமான் விமர்சித்தார். “முதலீடு ஈர்க்கச் சென்றால், ஏற்கனவே ஈர்த்த முதலீடுகள் எங்கே சென்றன என்பதை முதல்வர் விளக்க வேண்டும். தேர்தலில் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணி அமைத்து இதுவரை எந்தப் பிரச்சனையும் சரி செய்யப்படவில்லை; எதுவும் சாதிக்கப்படவில்லை,” என்றார்.

அதேபோல், எதிர்கால அரசியல் குறிக்கோள்களைப் பற்றி சீமான், “நான் முதல்வராக வந்தால், அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வழங்குவதே என் முதல் கையெழுத்தாக இருக்கும். இவ்வாறு 100 கையெழுத்து போட்டு நாட்டின் திசையை மாற்றுவேன்,” என்று உறுதி அளித்தார்.

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி, விலைவாசி உயர்வு போன்ற பொதுமக்களின் சுமைகளை பற்றி கவனம் செலுத்துவோம் என்றும், “முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவரது விருப்பம். ஆனால் மக்களின் அன்றாட சிக்கல்கள் குறித்து பேசுவதே முக்கியம்,” எனவும் சீமான் சுட்டிக்காட்டினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The squirrel should shout jungle jungle by itself Why is it shouting uncle uncle Seeman who made fun of Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->