30 வயதிலே சுருக்கம் வந்துவிட்டதா?முதுமை எட்டிப் பார்க்குதா? இந்த 5 அறிகுறிகளை கவனிங்க!
Are you starting to get wrinkles at 30 Are you looking forward to old age Pay attention to these 5 signs
பொதுவாக வயது அதிகரிக்கும் போது தான் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சில சமயங்களில், அந்த மாற்றங்கள் இளமையிலேயே தென்படத் தொடங்குகின்றன. குறிப்பாக, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறைகள் காரணமாக “முன்கூட்டியே முதுமை” (early aging) தோன்றக்கூடும். இதனால் வெளிப்புற தோற்றத்திலேயே அல்லாமல், உடல் நலத்திலும் பாதிப்புகள் உருவாகும்.
அப்படிப்பட்ட சூழலில், உங்கள் உடல் வேகமாக வயதாகி வருகிறதா? என்பதை அறிந்து கொள்ள சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. அவற்றை கவனித்தால், காலத்திற்கு முன்பே உடல் முதுமை அடைந்துவிட்டதை புரிந்துகொள்ளலாம்.
1. எப்போதும் சோர்வாக உணருதல்
போதுமான தூக்கத்திற்குப் பிறகும் எப்போதுமே சோர்வாக இருந்தால், அது முன்கூட்டிய முதுமையின் அறிகுறியாகும். ஹார்மோன் சமநிலையின்மை, வைட்டமின் டி அல்லது பி12 குறைபாடு, உடல் வளர்ச்சிதை குறைவு ஆகியவையும் இதற்கு காரணமாகும்.
தீர்வு:
சீரான உணவு பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்
உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்
தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்யவும்
மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் அளவை பரிசோதிக்கவும்
2. தொப்பை கொழுப்பு அதிகரித்தல், தசை பலவீனம்
எடை அதிகரிக்காமல் இருந்தாலும், தொப்பைச் சுற்றி மட்டும் கொழுப்பு சேர்வது, அல்லது தசைகள் பலவீனமாதல் முதுமையின் அறிகுறி. இது பொதுவாக 30 வயதிற்குப் பிறகு அதிகமாகத் தென்படும்.
தீர்வு:
முட்டை, சிக்கன், பருப்பு, சீஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்
வலிமை பயிற்சிகளைப் பழகுங்கள்
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
3. மூட்டு வலி, விறைப்புத் தன்மை
எந்த காயமுமின்றி மூட்டுகளில் வலி அல்லது விறைப்புத் தன்மை ஏற்படுவது வயதானதற்கான அடையாளமாகும். வயதுக்கு ஏற்ப எலும்பு அடர்த்தி குறைவதும், மூட்டுகள் kulainthuvittalum காரணமாகும்.
தீர்வு:
வைட்டமின் டி, கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
யோகா, நீச்சல் போன்ற குறைந்த தாக்கம் உள்ள பயிற்சிகளை செய்யுங்கள்
ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்
4. நினைவாற்றல் குறைவு
அடிக்கடி மறதியோ, கவனம் செலுத்த சிரமமோ இருந்தால் அது மூளைச் செல்கள் சுருங்கத் தொடங்கியதற்கான சுட்டிக்காட்டாகும்.
தீர்வு:
புத்தக வாசிப்பு, புதிர் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்
மீன், வால்நட் போன்ற ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
7-8 மணி நேரம் உறங்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும்
5. வறண்ட சருமம், சுருக்கங்கள்
சருமம் வறண்டதாய், தளர்ந்ததாய், முகத்தில் சுருக்கங்களுடன் தோன்றுவது முதுமையின் பொதுவான அடையாளம். இது கொலாஜன் உற்பத்தி குறைவதாலேயே நிகழ்கிறது.
தீர்வு:
அதிக தண்ணீர் குடியுங்கள்
மது, புகைபிடிப்பைத் தவிர்க்கவும்
ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்
சன்ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் பயன்படுத்துங்கள்
குறிப்பு: மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் உங்களிடம் இருந்தால், அவற்றை புறக்கணிக்காமல் வாழ்க்கை முறையில் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றால் முன்கூட்டிய முதுமையைத் தடுப்பதோடு, நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
English Summary
Are you starting to get wrinkles at 30 Are you looking forward to old age Pay attention to these 5 signs