+2 பொதுத்தேர்வு முடிவுகள்! மாணவ செல்வங்களுக்கு மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து!
PMK Ramadoss wish 12th result 2025
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தவறியோர் மீண்டும் எழுதி வெல்ல வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின்படியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss wish 12th result 2025