ஐபிஎல் விதிகளை மீறிய வருண் சக்கரவர்த்தி: ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம்..!
Varun Chakravarthy who violated IPL rules 25 percent fine from his salary
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து, கொல்கத்தாவை 02 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி தொடர் தோல்விக்கு பின் ஆறுதல் கிடைத்தது. இந்நிலையில், இந்த போட்டியில் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு, போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Varun Chakravarthy who violated IPL rules 25 percent fine from his salary