'அணு ஆயுதங்களே நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உண்மையான உத்தரவாதம்'; ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து வடகொரியா அதிபர் பேச்சு..!
Following the US attack on Iran the North Korean leader's remarks have garnered attention
தனது நாடு அணு ஆயுதங்களைக் கைவிட மறுத்த முடிவு சரியானது என வட கொரிய நாடாளுமன்றத்தில் அதிபர் கிம் ஜாங் உன் உரையாற்றியுள்ளமை உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது.
தற்போது ஈரான் மீதான இஸ்ரேல்+அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்கள், அணு ஆயுதங்களைத் தக்கவைத்துக் கொள்ள வட கொரியா எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிப்பதாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதிலும் வட கொரியாவின் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்து இனி மாற்ற முடியாதது என்றும், இதில் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்குப் பதிலாக வழங்கப்படும் பொருளாதாரச் சலுகைகளை ஏற்க முடியாது எனவும், அணு ஆயுதங்களே நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உண்மையான உத்தரவாதம் என்றும் அவர் பேசியுள்ளார். அத்துடன், தென் கொரியாவைத் தனது நாட்டின் "மிகவும் விரோதமான நாடு" என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும், இனிமையான பேச்சுகளுக்கும் மயங்காமல் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதே நாட்டின் வளர்ச்சிக்குச் சரியான வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அணு ஆயுதங்கள் வெறும் போர் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் பாதுகாப்புக் கேடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அணு ஆயுதங்கள் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சூழல் உலகிற்கு உணர்த்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்தச் செலவில் 15.8 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு வடகொரியா ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உலக நாடுகளை அதற்றத்தில் வைத்துள்ள ஈரான் போருக்கு மத்தியில், அணுவாயுத தயாரிப்பு ஒரு நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கிறது என வட கொரியா அதிபரின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.
English Summary
Following the US attack on Iran the North Korean leader's remarks have garnered attention