ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கர்கள் அதிருப்தி; கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்..! - Seithipunal
Seithipunal


ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறிச் செயல்படுவதாகவும் அந்நாட்டுப் பெரும்பான்மை தலைவர்கள் கொல்லப்பட்டதில் அமெரிக்க மக்களுக்கு உடன்பாடில்லை என்பதும் கருத்துக்கணிப்பில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா + இஸ்ரேல் - ஈரான் போர், நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இன்னும் போர் நிறுத்தம் எட்டப்படாமல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் அதிரடியாக முடக்கியுள்ளது.

இதன்காரணமாக உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அத்துடன், 05 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், இதை ஈரான் முற்றிலும் மறுத்துள்ளதோடு, ட்ரம்பை கேலி செய்துள்ளது. இதுதவிர, இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஈரான் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானிடம் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறிச் செயல்படுவதாகவும் அந்நாட்டுப் பெரும்பான்மை தலைவர்கள் கொல்லப்பட்டதில் அமெரிக்க மக்களுக்கு உடன்பாடில்லை என்பதும் கருத்துக்கணிப்பில் ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

AP-NORC நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் நடவடிக்கைகள் மக்களிடையே செல்வாக்கற்றவையாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை வரம்பு மீறியதாக இருந்ததாக சுமார் 59% அமெரிக்கர்கள் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்வதைத் தடுக்க வேண்டியதும் முக்கியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poll Reveals Americans Dissatisfied with Trumps Actions Regarding Iran


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->