பாகிஸ்தான் ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறும் என்று மக்கள் நினைக்கிறார்கள்: ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு..!
People think that Pakistan will break into five pieces RSS Senior leader Indresh Kumar speech
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் 09 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த மாநாட்டில் பேசிய போது கூறியதாவது:
'பிறந்ததிலிருந்து வன்முறையையும் ரத்தக்களரியையும் கண்டு வரும் பாகிஸ்தான், ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த நாடு ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறும் என்று மக்கள் கூறுகிறார்கள்.' என்று இந்திரேஷ் குமார் பேசியுள்ளார்.
English Summary
People think that Pakistan will break into five pieces RSS Senior leader Indresh Kumar speech