ஈரோடு | ஒழுங்கா எடுத்த இடத்தில் வைத்திடுங்க! இல்லை மாகாளி பரிகாரம் தான்!
Erode Vellankovil Robbery issue
ஈரோடு அருகே திருடு போன நகையை மீட்பதற்காக, மாகாளியம்மன் கோவிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யப் போவதாக கட்டவுட் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15ஆம் தேதி இவர் வீட்டு பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார்.
மறுநாள் 16ஆம் தேதி வீடு திரும்பிய ராமசாமி, வீட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகை, 3 ஆயிரம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனை அடுத்து ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனது வீட்டில் கொள்ளை அடிக்க பட்ட பணம், நகையை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அங்கேயே மீண்டும் வைத்து விடும் வைத்து விடுங்கள். இல்லை என்றால் மகாகாளியம்மன் கோவிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யப் போவதாக கட்டவுட் ஒன்றை ராமசாமி வைத்துள்ளார்.
மேலும் அந்த கட்டவுட்டில் மாகாளியம்மன் கோவிலில் இப்படி பரிகாரம் செய்தால் நகை பணத்தை எடுத்தவர்கள் குடும்பமே கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அதில் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்த பேனர் குறித்த செய்தி சுற்று வட்டார மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Erode Vellankovil Robbery issue