ஒரு வாரத்திற்குள் ஐ.பி.எல். போட்டி நடக்கவில்லை என்றால், பி.சி.சி.ஐ. கெதி..? இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை..!
Former England player warns BCCI of headache if IPL match doesnt happen within a week
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.அதற்கு இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்தூர்' மூலம் கொடுத்த பதிலடியை கொடுத்தது. இந்நிலையில், கடந்த பஞ்சாபி மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான லீக் போட்டி பஞ்சாப் தர்மசாலாவில் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தான் வான் வெளியில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அட்டவணை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 05 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை மீறி பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதா ..? இல்லையா என சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இது குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் மாலன் கூறுகையில்: "இந்தியாவிலோ, இலங்கையிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு வாரத்திற்குள் ஐ.பி.எல். மீண்டும் நடக்கவில்லை என்றால், அவர்கள் அவர்கள் செப்டம்பரில் தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பெரிய டெஸ்ட் தொடர் வரவிருக்கிறது. அதற்கு முன் ஐ.பி.எல். முடிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கு பிறகு தொடங்க வேண்டும். இது பி.சி.சி.ஐ.-க்கு பெரிய தலைவலியாக இருக்கும்.
இரு நாட்டு வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு அடிப்படையில் சூழ்நிலைகள் அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
English Summary
Former England player warns BCCI of headache if IPL match doesnt happen within a week