கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை: பூந்தமல்லியில் வடமாநில வாலிபர் கைது; 10 கிலோ கஞ்சா பறிமுதல்..! 
                                    
                                    
                                   A Northern State youth was arrested for selling cannabis targeting college students in Poonamallee
 
                                 
                               
                                
                                      
                                            பூந்தமல்லி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில், வடமாநில வாலிபர் ஒருவர் கையில் சூட்கேசுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது சூட்கேசை போலீசார் சோதனை செய்ததில், அதற்குள் 10 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கனாநாத் மாலிக் (33) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை பூந்தமல்லி பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       A Northern State youth was arrested for selling cannabis targeting college students in Poonamallee