கொலை செய்யப்பட்ட கணவன் சாயலில் இருப்பதாக பொதுமேடையில் துணை அதிபரை நெருக்கமாக கட்டி தழுவிய அரசியல் ஆர்வலர்; அமெரிக்க அரசியலில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் பிரபல அரசியல் ஆர்வலரும், 'டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அவரது மனைவி எரிகா கிர்க் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடந்த அமைப்பின் நிகழ்வில் அவர் முதன்முறையாகப் பங்கேற்றார். 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கலந்துகொண்டார்.  அவரை அறிமுகப்படுத்திப் பேசிய  எரிகா, கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். அப்பத்துடன், 'எனது கணவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸிடம், என் கணவரின் சில சாயல்களைக் காண்கிறேன்’ என்று குறிப்பிட்டு பேசியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், மேடைக்கு வந்த வேன்ஸை, எரிகா நீண்டநேரம் கட்டித்தழுவியதோடு, வேன்ஸின் இடுப்புப் பகுதியில் எரிகாவின் கைகளும், எரிகாவின் தலையைக் கோதியபடி வேன்ஸின் கைகளும் இருந்தன. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கணவரை இழந்த பெண், திருமணமான ஒருவருடன் அதுவும் நாட்டின் துணை ஜனாதிபதியுடன் இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனப் பலரும் விமர்சித்துள்ளனர். இதனையடுத்து, இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஊடக நேர்காணல் ஒன்றில் பதிலளித்த எரிகா, 'எனது ஒவ்வொரு அசைவையும் கேமராக்கள் ஆராய்கின்றன. என் கணவர் கொல்லப்பட்டதையும், நாங்கள் துக்கத்தில் இருந்ததையும் படம் பிடித்தார்கள்.

இப்போது நான் சிரித்தால் கூட சர்ச்சையாக்குகிறார்கள். ஆனால், என் கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட டைலர் ராபின்சனின் நீதிமன்ற விசாரணையை மட்டும் முழுமையாகப் பதிவுசெய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அங்கு வெளிப்படைத்தன்மைக்காக கேமராக்களை அனுமதிக்க வேண்டும்' எனக் கூறி, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். 

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இந்திய வம்சாவளியான உஷாவின் மதம் குறித்து பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political activist hugs US Vice President in public says he looks like his murdered husband


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->