சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த காவல்துறை!
ERODE POLICE NOTICE ISSUE TO SEEMAN
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறான கருத்தை பேசியதாக பதியப்பட்ட வழக்கில், தற்போது சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, அருந்ததியர் இன மக்கள் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் பேசியதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக அருந்ததியர்கள் தெலுங்கு மொழியில் பேசுவதால், அவர்கள் தமிழர்கள் இல்லை என்றும், அவர்கள் விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள வந்தவர்கள் என்றும் சீமான் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு குறித்து வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் சீமானுக்கு, கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
English Summary
ERODE POLICE NOTICE ISSUE TO SEEMAN