தினமும் 10 கோடி வசூல்! 26 கவுண்டிங் மிஷின்! மொத்தமாக அள்ளிச்சென்ற ED அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் குவாரியில் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வரை மணல் விற்பனை நடைபெறுவதாகவும், இந்த பணத்தை எண்ணவதற்காக கண்டெய்னர் அறைகள் அமைக்கப்பட்டு 28 பணம் என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. 

இந்த மணல் குவாரியில் மூன்று யூனிட்டுக்கு 624 ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்து மணல் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில் டோக்கன் கொடுப்பதற்கு ஒரு ஏஜென்ட் நியமிக்கப்பட்டு அவர் மூலம் கமிஷன் பெற்று வந்தது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. 

மேலும் கூடுதல் விலைக்கு தனிநபர் மூலம் ஆயிரக்கணக்கான லாரிகளில் அரசு பர்மிட் இல்லாமல் மணல் அல்லப்படுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது பல போலி ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சேலம் மணல் குவாரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பல காட்சிகள் அழிக்கப்பட்டதும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சாதிக் பாஷா, உதவியாளர் சத்யராஜ் உள்ளிட்டவரை அமலக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிக்கு வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நீர்வளத்துறை அதிகாரிகள் 3 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்ததோடு அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் செல்போன்களை கைப்பற்றியதால் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED took several important documents from Trichy Sand Quarry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->