சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்!
E Charging point chennai
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், ரெயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ரெயில் பயணிகளுக்காக சில நிலையங்களில் உள்ள சார்ஜிங் நிலையங்களை மேம்படுத்துவதுடன், புதியதாகவும் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சென்னையில் முதற்கட்டமாக 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட இடங்கள்:
1. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் மற்றும் கடற்கரை பார்க்கிங்
2. அம்பத்தூர் மங்கல் ஏரி
3. தியாகராயர் நகர் மாநகராட்சி மைதானம் மற்றும் சோமசுந்தரம் மைதானம்
4. ஆயிரம் விளக்கு செம்மொழிப் பூங்கா
5. மெரினா கடற்கரை
6. அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா
7. மயிலாப்பூர் நகேஸ்வரா ராவ் பூங்கா
இரண்டு வாரங்களில் டெண்டர் அறிவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் விரைவில் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.