ச்சில் ! வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்...! - அனிருத் விளக்கம் - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் 'அனிருத்'. இவர் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். இப்போது அவர் ஜெயிலர் ௨, கூலி, மதராஸி, ஜனநாயகன் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இவரின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது, ஐபிஎல் கிரிகெட் தொடரிலுள்ள ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனை அனிருத் திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த சமையத்தில், தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், "கல்யாணமா.. எனக்கா? கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chill Stop spreading rumors Anirudhs explanation


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->