வாளைப் பிடிக்குமாறு வற்புத்தியை மநீம நிர்வாகி, கடுப்பான கமல்ஹாசன்: வைரலாக வீடியோ..! - Seithipunal
Seithipunal


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் அக்கடிச்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான கமல்ஹாசனுக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி அனைவரும் வாழ்த்தினர். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அப்போது நிர்வாகி ஒருவர், கமல்ஹாசனுக்கு வாள் ஒன்றை பரிசாக வழங்க முயன்றார். ஆனால், கமல்ஹாசன் அதனை வேண்டாம் என்று கூறியுள்ளார்.  ஆனாலும், அந்த நிர்வாகி வாளைப் பிடிக்குமாறு கமல்ஹாசனை வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த கமல்ஹாசன், கோபமாக "வாள் கையில் இருக்கக் கூடாது. கீழே வையுங்கள்" என கூறியுள்ளார். 

இவ்வாறு வாளை கையில் திணிக்க முயன்ற நிர்வாகியை கமல்ஹாசன் கடிந்துகொண்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The MNM administrator forced him to hold the sword Kamal Haasan became fierce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->