கமர்ஷியல் திரில்லர் படம் மூலம் இயக்குனராகும் பார்த்தீபனின் மகன்..!
Partheepans son Rocky Partheepan to turn director
தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். அவர் இயக்கிய முதல் திரைப்படம் "புதிய பாதை" (Pudhea Paathai) ஆகும். இது 1989-இல் வெளியானது. இறுதியை கடந்த 2024 -ஆம் ஆண்டு டீன்ஸ் என்ற படத்தைய் இயக்கி நடித்து இருந்தார். தற்போது பல படங்களில் நடிப்பதோடு தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது மகன் ராக்கி பார்த்திபன் தமிழ் சினிமாவின் இயக்குனர்க அறிமுகம் ஆகவுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளதாவது:
ராக்கி பார்த்திபன் ! என் மகன்..என் உயிருக்கு நிகர்.. கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்! என்று நெகிச்சியாக பதிவிட்டுள்ளார்.
English Summary
Partheepans son Rocky Partheepan to turn director