நடுரோட்டில்.. இன்ஸ்ட்டா காதலியை கழட்டிவிட்டு... கஞ்சா ஆசாமி செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கஞ்சாவிற்கு அடிமையான இளைஞர் இன்ஸ்டாகிராம் காதலியை பைக்கில் அழைத்துச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான விஜி. பிளஸ் டூ படிப்பை முடித்த இவர்  மேற்கொண்டு படிப்பை தொடராமலும்  வேலைக்கும் செல்லாமல் மது மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி நண்பர்களுடன் சேர்ந்து பைக் ஸ்டண்ட் செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த +2 மாணவி ஒருவருக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் பைக்கில் அடிக்கடி ஒன்றாக ஒரு சுற்றி வந்திருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று  கஞ்சா போதையிலிருந்த விஜி தனது நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு காதலியை சந்திக்க சென்றிருக்கிறார்.

அப்போது தனது காதலியையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில்  அதிவேகத்தில் சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த பைக்  சாலையின் தடுப்புச் சுவரில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் அவரது காதலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். லேசான காயங்களுடன் இருந்த விஜி என்ன நடந்தது என்று தெரியாமல் காதலியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது காதலியை நீண்ட நேரத்திற்கு பிறகு ஒருவர் மீட்டு ஆசாரிப்பள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது காதலி கடந்த புதன் கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில்  விஜி மீது போக்சோ மற்றும் ஆள் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drug adict youth arrested for the deathof his insta lover


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->