திமுகவின் பிரபல ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! - Seithipunal
Seithipunal


திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாசமான, அருவருக்க தக்க பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திமுகத் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

திமுக பேச்சாளர்களில் வாயை திறந்தாலே ஆபாச அர்ச்சனை செய்யும்  பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அண்மையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் ஆபாசமான வார்த்தைகளில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், பல்வேறு தரப்பினரும் இதுதான் திராவிட மாடலா? என்று கண்டன குரல் எழுப்பினர்.

மேலும், பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவும் செய்தியாளர்களை சந்தித்து தனது கடும் கண்டனத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்தார்.

அவரின் அந்த பேட்டியில், "பெண்கள் பற்றி அவதூறாக பேசுவதை கதவுக்கு பின்னிருந்து ஸ்டாலின் ரசித்து கொண்டிருக்கிறார். 

இவர்களை போன்றவர்களுக்கு தீனி போட்டு வளர்த்து விடுகிறார் ஸ்டாலின். கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் பிரபல ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Sivaji Krishnamoorthy dismissed in dmk


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->