மாதாந்திர பாஸ் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்...! ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய ஸ்மார்ட் வசதி...! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒருங்கமைந்த போக்குவரத்து குழுமம்’ (கும்டா), ‘சென்னை ஒன்’ (Chennai 1) என்ற செயலியை கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அறிமுகப்படுத்தியது.

இந்தச் செயலி மூலம் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை க்யூஆர் (QR) குறியீடு வாயிலாக மக்கள் எளிதாகப் பெற்று வருகின்றனர். தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியில் ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்பிலான மாதாந்திர பேருந்து அட்டைகளையும் பெற்று புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இதுவரை, பேருந்தில் ஏறியதும் பயணிக்கும் பேருந்தின் எண்ணை செயலியில் பதிவிடுவது கட்டாயமாக இருந்தது.

இது சிரமமாக இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, இனி நடத்துனரிடம் செயலியில் உள்ள மாதாந்திர அட்டையைக் காண்பித்தால் மட்டுமே போதும் என்று கும்டா அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Great News Monthly Pass Holders New Smart Feature Chennai One App


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->