பசிபிக் பெருங்கடலில் 10,000 அடிக்கு கீழ் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி; உடலை விட 20 மடங்கு நீளமான கைகளுடன் விசித்திர உயிரினம்; ஏலியனாக இருக்கலாம்..?
A bizarre creature with arms 20 times longer than its body has been discovered more than 10000 feet deep in the Pacific Ocean
இந்த நவீன உலகில் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம், நிலவின் மேற்பரப்பு, சூரியன் போன்ற விண்வெளி கிரகங்களையும், துணை கோள்களையும், நட்சத்திரங்களையும், விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
விஞ்ஞானிகள் விண்வெளியில் கண்டுபிடித்ததை காட்டிலும், நமது பூமியிலேயே இருக்கும் கடலை அவ்வளவாக ஆராய்ந்தது கிடையாது என்றே சொல்லலாம். இதுவரை, 0.0001 சதவீதம் மட்டுமே, அவர்கள் கடலை ஆய்வு செய்திருக்கிறார்கள். கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால், மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல்களால் கூட அங்கு செல்ல முடியாது.
அத்துடன், சூரிய ஒளி மொத்தமாக மறைந்து, உறைபனி அளவு குளிரும் நிலவுவதால், மனிதர்களால் தீவிர ஆராய்ச்சிகளை நடத்த முடிவதில்லை. கடலுக்கு அடியில் உள்ள 07 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்கள் இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாமலேயே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏலியன் மாதிரியான உயிரினம் ஒன்றை கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்தில், பிக்ஃபிக் ஸ்குவிட் என்ற உயிரினம், உயிருடன் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வடகிழக்கு பசிபிக் பகுதியில், ஒரு ஸ்குவிட் இனம் உயிருடன் இருப்பதை விஞ்ஞானிகள் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். MBARI என்ற நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம், கடலுக்கு அடியில் கடந்த ஆகஸ்டு 07-ஆம் தேதி அன்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது இந்த உயிரினத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
குறித்த உயிரினம், மொத்தமாக 4.1 அடி நீளம் கொண்டதாகவும், தனது உடலை விட கிட்டதட்ட 20 மடங்கு அதிக நீளமான கைகளையும், உணர் கொம்புகளையும் வைத்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வாழக் கூடிய திறன் கொண்ட இது. தனது உணர் கொம்புகளை விரித்து வைப்பதன் மூலம், மற்ற உயிரினங்களை எளிதில் வேட்டையாடி, உணவு பெற முடிவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அதிசய உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் பதிவு செய்து வைத்துள்ள புதிய வீடியோ, அதன் உடலமைப்பு குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.
English Summary
A bizarre creature with arms 20 times longer than its body has been discovered more than 10000 feet deep in the Pacific Ocean