தொடர் சரிவில் தங்கம்...! 6 நாட்களில் பவுனுக்கு ரூ.3,760 குறைவு ...! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரச் சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதும், உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மாற்றங்களும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,760 வரை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,27,856-க்கும், 18 காரட் தங்கம் பவுன் ரூ.98,640-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளி விலை உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.4,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Continuous Decline Price Drops by 3760 Per Sovereign 6 Days What Today Rates


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->