இன்ஸ்டா டிஎம் அதிரடி மாற்றம்: என்கிரிப்ஷன் நீக்கம்...! - பயனர் தனியுரிமை கேள்விக்குறி...! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் தளத்தில் நேரடிச் செய்திகளுக்கான (Direct Messages) 'எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன்' (End-to-End Encryption) வசதி வரும் மே 8-ம் தேதி முதல் முடிவுக்கு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2023-ல் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால், பயனர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள் மற்றும் தரவுகளை மெட்டா நிறுவனத்தால் அணுக முடியும்.

இது விளம்பர நோக்கங்களுக்காகவோ அல்லது சட்ட ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையிலோ பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், பயனர்களின் பிரைவசி குறித்த கவலை எழுந்துள்ளது.

மைக்ரோபோன் மூலம் பயனர்களை உளவு பார்ப்பதாக ஏற்கனவே புகார்கள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை விரும்புவோர் வாட்ஸ்அப் போன்ற என்கிரிப்ஷன் வசதி கொண்ட செயலிகளுக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major Overhaul Insta DM Encryption Removed User Privacy Risk


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->