அதிர வைத்த சென்னை வழக்கு: போலீஸ்காரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை...! - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் மகேஷ் (33), புழல் சிறை கண்காணிப்பாளரின் தனிப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு, முகநூல் வழியாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 16 வயது கல்லூரி மாணவியுடன் பழகிய அவர், காதலிப்பதாகக் கூறி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.

பின்னர், கோவளம் பகுதியில் உள்ள தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்த நிலையில், அவரைத் திருமணம் செய்ய மறுத்த மகேஷ், கருவைக் கலைக்கவும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி 2020, நவம்பர் 19 அன்று தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் தனது நிலைக்கு மகேஷ் மட்டுமே காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவலர்கள், மகேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மாணவியின் மரண வாக்குமூலத்தை முக்கிய ஆதாரமாக ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரபாபர், குற்றம் சாட்டப்பட்ட மகேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking Chennai Case Double Life Sentence Police Officer Court Issues Stern Warning


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->