பாஜகவுக்கு அதிமுக தோப்புக்கரணம் போடுது - முக ஸ்டாலின் கடும் விமர்சனம்!
DMK MK Stalin Say About ADMK BJP in kovai
பாஜகவுக்கு அதிமுக தோப்புக்கரணம் போடுவதாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மேற்கு மண்டல (கொங்கு) வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு உருவாக்கிய திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள், முதியோர்கள், மாணவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4000 ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
படித்த பிள்ளைகள் வேலை கேட்க பக்கோடா விற்கச் சொன்ன பிரதமர் மோடி. பாஜக, இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கருப்புப்பணத்தை மீட்கவில்லை, வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, விவசாயிகளின் வருமானத்தை உயரத்தவில்லை.
ஒன்றிய பாஜக அரசால் சீரழிக்கப்பட்ட திருப்பூர், கோவையில் உள்ள தொழிற்சாலைகளை சரிவில் இருந்து மீட்பதற்கான வேலைகளை திமுக அரசு செய்து வருகிறது.
டாலர் சிட்டியான திருப்பூரையும், மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையையும் நிச்சயம் மீட்டெடுப்போம்.
பெண்கள் மீது உண்மையான அக்கறையின்றி தேர்தல் நாடகமாடும் பாஜகவை, 33% இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வராமல் ஏமாற்றும் பாஜகவை டெப்பாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" என்று முக ஸ்டாலின் பேசினார்.
English Summary
DMK MK Stalin Say About ADMK BJP in kovai