திமுக அமைச்சர் வழக்கின் நீதிபதி மாற்றம்!
DMK Minister Ma Subramaniyan case update
சென்னை கிண்டி தொழிலாளர் குடியிருப்பில், எஸ்.கே.கண்ணனுக்கு சிட்கோவால் ஒதுக்கப்பட்ட நிலத்தை, முன்னாள் மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தனது மனைவி காஞ்சனா பெயரில் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ஆம் ஆண்டு புகார் அளித்ததைத் தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2019-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தற்போது இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட்டது.
இவ்வழக்கு, முதலில் கூடுதல் சிறப்பு நீதிபதி பிரபாகரன் அமர்வில் இருந்தது. தற்போது, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு, நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கே வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குற்றச்சாட்டு பதிவு ஜூன் 17-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK Minister Ma Subramaniyan case update