தலைநகர் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; போக்குவரத்து பாதிப்பு: விமானங்கள் தாமதம்; பொதுமக்கள் அவஸ்த்தை..!
Heavy rain with thunder and lightning in the capital Chennai
தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், மே 27-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலோ இன்று இரவு 08:00 மணி முதல் தாம்பரம், குரேம்பேட்டை, வண்டலூர், முடிச்சூர், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, திருவான்மியூர், அடையாறு தாம்பரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழையின் எதிரொலியாக பல்வேறு நகரங்களில் சென்னை வரவேண்டிய விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, மாவட்டங்களுக்கு மே 25, 26 தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாட்களில் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்காக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Heavy rain with thunder and lightning in the capital Chennai