சினிமாவில் சலசலப்பு! தயாரிப்பாளர்கள் கைது..! - போதை வட்டத்தை அம்பலப்படுத்திய காவலர்கள்...!
Uproar cinema Producers arrested Police officers who exposed drug ring
சென்னையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் தொடர்புடையதாக, திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கம் தொழில் அதிபர் சரத் ஆகிய மூவரையும் திருமங்கலம் போலீசார் 20ஆம் தேதி கைது செய்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது சர்புதீனின் காரில் இருந்து ₹27.91 லட்சம் மற்றும் சீனிவாசன் வீட்டில் இருந்து 10 கிராம் ‘ஓ.ஜி’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, சர்புதீன் மற்றும் சரத்திடம் போலீசார் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சர்புதீன் முன்னாள் நடிகர் சிம்புவின் மேலாளராக வேலை பார்த்ததுடன், பல நடிகர்–நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதனை அடுத்து, சர்புதீன் வழங்கிய தகவலின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ்ராஜ்–ஐ போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சர்புதீனிடமிருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது விசாரணையில் உறுதியானது. ‘சினிமா’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தினேஷ்ராஜ், ‘பிளாக்மெயில்’ படத்தை விநியோகம் செய்தவர்; தற்போது நடிகர் தனுஷின் உறவினர் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தை தயாரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கைதான தினேஷ்ராஜிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருக்கும் எந்த நடிகர், நடிகைகளுக்கும் அவர் போதைப்பொருள் வழங்கியிருக்கிறாரா என்பது குறித்து விசாரணை முடிந்த பின் தெளிவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தினேஷ்ராஜ் ‘பிரிமியர் புட்சால் இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு, பல பிரபல சர்வதேச கால்பந்து வீரர்களை கொண்டு போட்டிகள் நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Uproar cinema Producers arrested Police officers who exposed drug ring