600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்: நாசிக்கில் 6 பேருக்கு பரிதாபகரமான முடிவு...!
Car overturns 600 foot gorge Tragic end 6 people Nashik
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் நிப்ஹட் பகுதியில் வசிக்கும் 6 பேர் நேற்று மாலை ஒரு காரில் கல்வான் நோக்கி பயணம் செய்தனர்.
கல்வான் அருகே உள்ள மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியை சென்றபோது, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் 600 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு வீழ்ந்தது.

இந்த கொடூர விபத்தில் காரில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Car overturns 600 foot gorge Tragic end 6 people Nashik