திருப்பதி திருமலையில் தொழுகை நடத்திய மர்ம நபர்: தமிழகத்தில் இருந்து வந்தவரா..? போலீசார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருப்பதி திருமலையில் வேற்று மத பிரசாரங்கள், தொழுகைகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்த முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமலைக்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அலிபிரி சோதனைச் சாவடியில் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

அத்துடன், வாகனங்கள் மீது இதர மதம் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஸ்டிக்கர்களோ, படங்களோ, கட்சிக் கொடிகளோ இருந்தால் அந்த வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நேற்று திருமலையில் உள்ள 'கல்யாண வேதிகா' என்னும் மண்டபத்தின் அருகே, தலையில் தொப்பி அணிந்தபடி காணப்பட்ட நபர், "நான் இங்கு தொழுகை செய்ய வேண்டும். அதற்கு தகுந்த இடம் எங்கே இருக்கிறது"?என அங்குள்ள பக்தர்களிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அங்குள்ளவர்கள் யாரும் பதில் கூறவில்லை. அதனால் அவர்  அங்கெ ஒரு இடத்தை தேர்வு செய்து சுமார் 10 நிமிடங்கள் வரை தொழுகை செய்துள்ளார். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொழுகையை முடித்துவிட்டு அந்த நபர் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு காரில் அமர்ந்துள்ளார். அப்போது ஒரு நபர், அவரிடம் " இங்கு தொழுகை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அதனையும் மீறி தொழுகை செய்துள்ளீர்கள்" என கூறியுள்ளார்.

அதற்கு அவர் 'எனக்கு தெரியாது' என அந்த நபர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்று திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did the person offered prayers at Tirupati Tirumala come from Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->