''யாஷ் படத்தை எப்போதும் தயாரிக்க மாட்டேன்'': அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிமுக தயாரிப்பாளர்....! - Seithipunal
Seithipunal


'கேஜிஎப்' புகழ் யாஷ் 'டாக்சிக்' மற்றும்  பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், யாஷ் படத்தை தயாரிக்கவே மாட்டேன் என்று அறிமுக தயாரிப்பாளர் ஒருவர் கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 

யாஷின் அம்மா புஷ்பா அருண்குமார், பிஏ புரொடக்சன்ஸின் கீழ் 'கொத்தலாவடி' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அவரிடம், மகன் யாஷ் படத்தை தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில், ''யாஷுக்கு ஏற்கனவே நிறைய பணமும் புகழும் உள்ளது, எனவே நான் மற்றவர்களின் படங்களை தயாரிப்பேன். ஏற்கனவே உணவு வைத்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறுவது சரியல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not produce a Yash film Debutant producer speaks


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->