"சிவப்புத் துண்டைச் சிறுமை செய்தால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது" - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி'யில் வெளியான விமரிசனக் கட்டுரைக்குத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முரசொலியின் இந்த நடவடிக்கை அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என்று சாடினார்.

முரசொலி விமரிசனத்திற்குப் பதில்டி

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தன்னுடைய வாழ்நாளையும் வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த மாமனிதர் தோழர் பெ.சண்முகம். கட்சிகளுக்கு இடையே அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவரைப் போய் 'டானிக் குடித்து வளர்ந்தவர்' என்றெல்லாம் விமரிசிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கலைஞர் கருணாநிதி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் முரசொலியின் இந்த அநாகரிகமான கட்டுரையை அவரே முதன்முதலாகக் கண்டித்திருப்பார். மேலும், அதிமுகவின் சி.வி.சண்முகத்தையும் இவரையும் ஒப்புமைப்படுத்தி இருவரையும் சிறுமைப்படுத்தியுள்ளனர். கம்யூனிஸ்டுகளின் அடையாளமான சிவப்புத் துண்டை இதுபோலத் தொடர்ந்து சிறுமைப்படுத்தினால் தவெக-வின் இரட்டைப் போர் யானை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது" என்று எச்சரித்தார்.

எ.வ.வேலு சோதனை குறித்து கருத்து

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனை குறித்தும் அமைச்சர் ராஜ்மோகன் விவரித்தார். "இந்தச் சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. முறையான முகாந்திரம் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் களமிறங்கியுள்ளனர். மிகச் சரியான ஆதாரங்களோடுதான் அவர் சிக்கியுள்ளார். இதனை அவர் சட்ட ரீதியாகத் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். தற்பொழுது ஒருவர் சிக்கியுள்ளார், அடுத்தடுத்து தவறு செய்த ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் வரவேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அவர்களைக் கண்டிப்பாகத் தப்பவிடாது" என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Rajmohan Condemns Murasolis Criticism of Left Leader P Shanmugam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->