அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணி படத்தில் இணையும் தீபிகா படுகோன்..!
Deepika Padukone to join the Atlee and Allu Arjun collaboration film
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் 05 நாயகிகள் நடிக்கவுள்ளனர். மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில், முக்கியமான நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் இந்த படத்தை உருவாக்கவுள்ளார் அட்லீ. இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் இதுவரை வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா படத்திலிருந்து தீபிகா படுகோன் விளக்கியிருந்தார். இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது.
English Summary
Deepika Padukone to join the Atlee and Allu Arjun collaboration film