கர்நாடகாவில் அதிர்ச்சி: மெட்ரோவில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்கிராமில் பதிவிட்ட நபர் கைது..!
Man arrested for taking obscene photos and videos of female metro passengers and posting them on Instagram
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கணக்கு தொடர்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த இன்ஸ்டா கணக்கினை நிர்வகிக்கும் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். இவர் கர்நாடகாவின் ஹசான் நகரை சேர்ந்த திஹந்த் என அறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் பணியாற்றி வருபவர்.

மெட்ரோ ரெயிலில் வேலைக்கு செல்லும்போது அதில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட திஹந்த் இடம் இது தொடர்ந்து போலீசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.
English Summary
Man arrested for taking obscene photos and videos of female metro passengers and posting them on Instagram