இந்திய வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு..!
Ban on Pakistani aircraft using Indian airspace extended
காஷ்மீர் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியா சிந்தி நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேப்போல இந்திய விமானங்களும் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த ஜூன் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட்டுள்ளது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த ஜூன் 24 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ban on Pakistani aircraft using Indian airspace extended